Saturday, 8 June 2024

கம்யூனிசம் கற்போம் தொகுதி 1 - அரசியல் பொருளாதாரம்

 நூல் அறிமுகம் - ஜி.மஞ்சுளா


  8மணி நேர வேலை, கூலி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக முதலாளித்துவம் துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை தொழிலாளர்கள் போராடியே வருகின்றனர். 

ஆரம்பத்தில் இயந்திரங்களை உடைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய தொழிலாளர்கள் பிற்காலத்தில் முறையாக சங்கம் அமைக்க கற்றுக் கொண்டு போராடினர். 1836ல் தொழிலாளர்கள் அரசியல் உரிமை பெறுவதற்கான சாசன இயக்கமும் தோன்றியது. தனித்தனி முதலாளிகளை எதிர்த்து தனித்தனி தொழிலாளர்களாக அல்லது தொழிலாளர் குழுக்களாக போராடி வந்த தொழிலாளிவர்க்கம் முழுவதுமாக கிளர்ந்து எழுந்து முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தையே பிரதானமாக தாக்க தொடங்கியது இந்த இயக்கத்தின் சிறப்பு என இந்த இயக்கத்தை எங்கெல்ஸ் மதிப்பிட்டார். 

சாசன இயக்கம்
        இருப்பினும் அனைவருக்கும் வாக்குரிமை  கிடைக்கப்பெற்றால் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளிகளின் பிரதிநிதிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். அதன்பின் தொழிலாளிகளின் அனைத்துப் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளையும் நாடாளுமன்றம் மூலமே தீர்த்துக் கொள்ளலாம் என தொழிலாளிகள் தவறாக கருதினர். சட்டபூர்வமாக புரட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது என்பதையும் சாசன இயக்கத்தினரின் சோசலிசம் கருநிலையில் இருக்கிறது. இதுவே பலவீனம் என்றும் எங்கெல்ஸ் கூறினார்.  

    இன்றும் கூட முதலாளிகள் தங்களை சுரண்டுகின்றர் என்பதை பல தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். அரசியல்ரீதியாக முதலாளித்துவ சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுவில் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமான்ய மக்களாகிய நாம் அனைவருமே தொழிலில் வரும் இலாபத்தை முதலாளி எடுத்து கொள்வதை நியாயமானதாகவே கருதுகிறோம்.

  ஏனெனில், தொழிற்சாலைக்கான இடம், உற்பத்தி சாதனங்கள் அனைத்திற்குமான மூலதனத்தை முதலாளி தான் போட்டு தொழில் துவங்கி தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறார். இதுவே பெரும் சேவை அல்லவா? முதலாளி இலாபத்தை எடுத்து கொள்வது நியாயமானது தானே? என மிக நியாய உணர்வோடு நாம் நினைத்து கொண்டிருக்கும் அப்பாவித்தனத்தை தான் மார்க்ஸ் தனது 'உபரி மதிப்பு' கோட்பாடு மூலம் உடைத்து நொறுக்கி விடுகிறார். 

    மார்க்சின் அந்த 'உபரி மதிப்பு' கோட்பாடு பற்றிய மார்ச்சிய அரசியல் பொருளாதாரத்தை பற்றி சுருக்கமாக ஒரே பத்தியில் அதேசமயத்தில் மிகத் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. உதாரணத்திற்கு, எட்டு மணி நேரம் உழைக்கும் ஒரு தொழிலாளிக்கு 2மணி நேர உழைப்பிற்கு நிகராக கூலி கொடுக்கப்படுகிறது. மீத 6மணி நேரம் ஊதியம் பெறாமல் அல்லது தரப்படாமல் உழைக்கிறார். அதுவே உபரி மதிப்பு. அந்த உபரியே இலாபத்தின் தோற்றுவாய். இந்த உபரி மதிப்பே மூலதனமாக திரள்கிறது. என விளக்கப்படுகிறது. இதிலிருந்து முதலாளியிள் இலாபம் என்பது கொடுக்கப்படாத கூலி தான். அதாவது, முதலாளி தொழிலாளியின் உழைப்பை சுரண்டி திருடிக் கொள்கிறார் என்பதை நாம் தெரிந்துக் கொள்கிறோம்.

    எல்லாம் சரி. 2மணி நேரத்திற்கான உழைப்பிற்கு மட்டுமே கூலி கொடுக்கப்பட்டு மீதி நேரத்திற்கானதை முதலாளிகள் இலாபமாக்கி கொள்கின்றனர் என்பதை எப்படி சொல்கிறீர்கள்?  என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால் அது நியாயமானது தான்.

    ஆனால் கேள்விக்கான பதிலை ஓரிரு வரிகளில் விளக்கி விட முடியாது. அதற்காக தான் மார்க்சிய பொருளாதாரத்தை விரிவாக கற்க வேண்டும் என்பதை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்தி கூறுகிறார்.

    அனைத்து பொருட்களுமே மனிதர்களால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தங்கமும், இரும்பும் ஏன் வெவ்வேறு மதிப்புடையதாக இருக்கிறது? தங்கம் இரும்பை விட பளபளப்பாக நீண்ட காலம் நீடித்திருக்கும் பண்பை பெற்றிருப்பதால் அதன் மதிப்பு வேறுபடுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் மார்க்சிய பொருளாதாரம் இந்த கருத்தை மறுத்து மாற்று கருத்தை முன்வைக்கிறது.

    ஒரு பொருளில் (பண்டத்தில்) செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் மதிப்பை பொறுத்தே அப்பொருளின் மதிப்பு உருவாகிறது. இதை மார்க்சுக்கு முன்பே ஆடம்ஸ்மித் போன்ற பொருளாதார நிபுணர்கள் கூறிவிட்டார்கள்.

ஆனால் அப்பொருளில் அடங்கியுள்ள உழைப்பின் மதிப்பை எப்படி அளவிடுவது?

   உற்பத்தி செய்வதற்காக செலவழிக்கப்பட்ட 'சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவை' கொண்டே அந்த உழைப்பின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என மார்க்ஸ் ஆராய்ந்து தெளிவு படுத்துகிறார்.

    இரும்பை உருவாக்க செலவழிக்கப்பட்ட சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தை விட தங்கத்திற்கு அதிக உழைப்பு நேரம் செலவிடப்பட்டுள்ளதன் காரணமாகவே தங்கம் அதிக மதிப்புடையதாக இருக்கிறது.

    சரி, இதை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்ய போகிறோம்? இது மட்டுமல்ல. மார்க்சிய பொருளாதாரத்தின் இதை போன்ற இன்னும் பலவற்றை நாம் கற்றால் தான்,  முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றியும், கூலி உயர்வுக்காக மட்டுமல்ல. கூலியடிமை முறையான இந்த முதலாளித்துவ சமூகத்தையே மாற்ற வேண்டும் என்பதன் அவசியத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலும்.

    அதனால் தான் மிகவும் அடிப்படையானவற்றை சுருக்கமாக கூறும் நூலாசிரியர், இங்கே இதை தெரிந்து கொண்டால் போதும் என நம்மை ஆற்றுபடுத்தி, அதேசமயத்தில்  வகுப்புகளில் மீண்டும் கவனமாக விரிவாக படிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

பணமும் மூலதனமும் ஒன்றல்ல.

உபரி மதிப்பே மூலதனமாக திரள்கிறது.

மூலதனம் சிறிய உற்பத்தியாளர்களையும் போட்டி முதலாளிகளையும்  ஒழித்து ஏகபோகமாகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி சமூகமயமாக உள்ளது. ஆனால் வினியோகம் தனியுடைமையாக சிலரிடம் செல்கிறது. இதுவே அடிப்படை முரண்பாடு. இந்த முரண்பாட்டை சட்டபூர்வமான முறையில் தீர்க்க முடியாது என்பதையும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே தீர்வு என்பதையும் மார்க்சியம் விளக்குகிறது.

    போட்டியும், மிகை உற்பத்தியும் கொண்டதே முதலாளித்துவ உற்பத்தி முறை என பலவற்றை சுருக்கமாக சொல்லிச் செல்லும் நூலாசிரியர் இறுதியில் முதலாளித்துவத்தின் தோல்வி தள்ளி போகலாம், ஆனால் முதலாளிகளை உழைப்பு தூக்கி எறிவது தவிர்க்க முடியாதது என நம்பிக்கையூட்டி முடிக்கிறார்.

    


அரசியல் பொருளாதாரம் என்பது
  பொருளாதார மேதாவிகளுக்கு மட்டுமல்ல. அதை நாம் ஒவ்வொருவரும் அவசியம் கற்றுணர வேண்டும். அதேசமயத்தில் அதை கற்க உழைப்பையும் செலவிட வேண்டும் என்பதை தோழர் அ.கா.ஈஸ்வரனின் எழுத்துக்கள் சொல்லாமல் சொல்லி செல்கிறது.



அடுத்து சோசலிசம் குறித்து

 தொடரும்...

Friday, 7 June 2024

கம்யூனிசம் கற்போம் தொகுதி - 1 தத்துவம்

நூல் அறிமுகம்  - ஜி.மஞ்சுளா


    தோழர் .கா.ஈஸ்வரன் மார்க்சியத்தை வகுப்புகளாக எடுத்ததும், சில கட்டுரைகளும் இணைத்து 'கம்யூனிசம் கற்போம்' என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக நூல்கள் வெளிவந்துள்ளன.

     இந்நூல்களில் தோழர் .கா.ஈஸ்வரனின் தெளிவான எழுத்தும், தொகுப்பும் மார்க்சியம் பற்றிய சரியான புரிதலை நமக்கு தருகின்றனஅதோடுநாம் பெற்ற சரியான புரிதலை, பல்வேறு கருத்து மோதல்கள் இருக்கும் இன்றைய சூழலிலும்  தயக்கமின்றி வெளிப்படுத்துவதற்கான  துணிச்சலையும், பலத்தையும் சேர்த்தே நமக்களிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான எழுத்துக்களாகவும் அவை உள்ளன.

    இந்நூலின் முதல் தொகுதியின் முதல் தலைப்பு 'லெனின் எழுதிய ' மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்' என்பதாகும். தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் ஆகிய உப தலைப்புக்களின் கீழ் மார்க்சியத்தின் உள்ளடக்கம் விளக்கப்பட்டுள்ளது.

    இதில் மார்க்சியத்தின் தத்துவமான 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' (Dialectical  materialism) என்பது என்ன? யார் முழுமையான பொருள்முதல்வாதிகள் (materialist) என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் லெனினின் எழுத்துகளில் இருந்து தோழர் .கா.ஈஸ்வரன் எடுத்து எழுதியுள்ளார்.

    மார்க்சியத்தின் தத்துவம் 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்'. இதை நாம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா?  நாத்திகவாதிகள் அதாவது கடவுள் மறுப்பாளர்கள் அனைவருமே முழுமையான  பொருள்முதல்வாதிகள் (materialist) என்பதான தவறான புரிதல் நம்மில் பலருக்கு இருக்கிறது.

    ஆனால் அவர்கள் முழுமையான பொருள்முதல்வாதிகள் அல்ல. மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் (materialism) அனைத்தும் கருத்துமுதல்வாதம் (idealism)  தான். எப்படி?  அதை தான் இந்நூல் சிறப்பாக விளக்குகிறது.

    மார்க்சுக்கு முன்பான பொருள் முதல்வாதிகள் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை ஏற்க மறுத்துகடவுள் இல்லை என்றனர்இயற்கையே முதன்மை. அதாவது பிரபஞ்சம் இருக்கிறது. அதில் மாற்றங்கள் நிகழ்கிறது என்றும் கூறினர். அந்த விதத்தில் பொருள்முதல்வாதிகளாக அவர்கள் இருந்தாலும், இயக்கம் என்பது சமூகத்திலும் நடைபெறுகிறது என்பதை  காணத் தவறினர்.

மார்க்ஸ் தான் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தை வரலாற்றுக்கு பயன்படுத்தினார்இது வரலாற்று பொருள்முதல்வாதம்(historical materilalism) எனப்படும். மேலும், ஒரு சமூக அமைப்பில் இருந்து மற்றொரு சமூக அமைப்பிற்கு மாறுவதற்கு, 'உற்பத்தி சக்திகளின்' வளர்ச்சியே காரணம் என்பதையும் விளக்கினார்.

    மார்க்சுக்கு முன்பான பொருள் முதல்வாதம் கூட சமூகத்தை கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தில் தான் அணுகியது. அதனால் மார்க்சுக்கு முந்தைய பொருள்முதல்வாதிகள் முழுமையான பொருள்முதல்வாதிகள் அல்ல. ஒருவகையில் அவர்களும் கருத்து முதல்வாதிகள் (idealist) தான்.

    இவ்வாறு தத்துவத்தில் நாம் அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டியதையும் பழைய குறைபாடுள்ள  பொருள்முதல்வாதத்தில் இருந்து மார்க்சியம் எங்கு வேறுபடுகிறது. மார்க்சின் பங்களிப்பான  வரலாற்று பொருள் முதல்வாதம் ஆகியவை குறித்து சிறப்பாக இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் அடிப்படையில் மார்க்சிய தத்துவத்தில் இருந்து வேறுபடும் இடம் வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டம் தான் என்பதும், ஒருவகையில் அவர்களும் கருத்துமுதல்வாதிகளே(idealist) என்பதும் இதிலிருந்து நாம் தெட்டத் தெளிவாக தெரிந்து கொள்கிறோம். 

மார்க்சிய தத்துவத்தை பிழையின்றி புரிந்துக் கொள்ள தோழர் அ.கா.ஈஸ்வரனின் எழுத்துக்கள்  நமக்கு கற்பிக்கின்றன.

வெளியீடு - பொன்னுலகம் புத்தக நிலையம்.



Thursday, 6 June 2024

மார்க்சியம் காப்போம்!

திருத்தல்வாதம் எதிர்ப்போம்! மார்க்சியம் காப்போம்!

மார்க்சியத்தை திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் எப்போது யாரால் தொடங்கப்பட்டது என்ற வரலாற்றை அறிவதற்கு மார்க்சியம் சில போக்குகள்’ என்ற தலைப்பில் தோழர் எஸ்.தோதாத்ரி எழுதிய நூல் நமக்கு பெரிதும் உதவுகின்றது. 1983ல் இருந்து 2004 வரை ஜனசக்தி, தாமரை, செம்மலர், சமூக விஞ்ஞானம் ஆகிய இதழ்களில் அவர் எழுதிய 6 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.




அதேபோல் மார்க்சியத்தின் மிக முக்கிய அடிப்படையான அடித்தளமும் மேற்கட்டுமானமும் பற்றி தோழர் அ.கா.ஈஸ்வரன் எழுதியுள்ள சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்’ என்ற நூல் மார்க்சியத்தின் அடிப்படைகள் எவை என்பதை தெளிவாக விளக்குவதோடுபண்பாட்டு மார்க்சியம்’ என்ற பெயரில் மார்க்சியம் எவ்வாறு திருத்தப்படுகின்றது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது.



தோழர் தோதாத்ரி நூலில், ‘மேலை மார்க்சியம்மற்றும்தமிழகத்தில் மார்க்சிய போக்குகள்ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ளவை கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, .மார்க்ஸ், தமிழவன் போன்றோர் மார்க்சியத்திற்கு எதிரான பின்நவினத்துவ கருத்துகளை கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மார்க்சியத்திற்கு எதிராக பேசுவதற்கான காரணங்கள் எவை என்பதையும் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன.

பொருள் உற்பத்திதான் மனிதனது செயல்களை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறதுஉணர்வு (மனது) என்பது இயற்கை, சமூகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஆகும்இதைதான் மார்க்ஸ்மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறதுஎன கூறினார்இது மார்க்சிய அடிப்படையாகும்.

ஆனால் இந்த மார்க்சிய-லெனினிய கருத்தை விமர்சனம் செய்யும் போக்கில் 1920களில் உருவானதே மேலைய மார்க்சியம் எனவும் லுகாக்ஸ், அல்தூசர் மற்றும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பிராங்பர்ட் குழுவினர் மார்க்சிய சிந்தனையை வளர்ப்பதாக கூறி முற்றிலும் மார்க்சியத்திலிருந்து விலகியதை தனது நூலில் தோதாத்ரி விளக்குகிறார்.

மனிதகுலம் தன்னுடைய அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை பெறுவதற்காக உழைப்புகருவிகளை தோற்றுவித்ததுஉழைப்பு கருவிகளிலும், மனித உழைப்புத் திறமையிலும் படிப்படியான வளர்ச்சி ஏற்படுகிறதுமனிதகுலம் கற்கருவியில் தொடங்கி கம்ப்யூட்டர் வரை வந்தடைந்துள்ளதை நாம் அறிவோம்.

உற்பத்தி அனுபவமும்திறமையும் கொண்ட மக்களின் உழைப்பு சக்தி மற்றும் உற்பத்தி சாதனங்கள் சேர்ந்து உற்பத்திசக்தி என அழைக்கப்படுகிறதுஉற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாகமுதலில் கூட்டுவாழ் பொதுவுடமை சமூகமாக இருந்த நிலைமாறி அடிமைசமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் முதலாளித்துவ சமூகம் என சுரண்டலை அடிப்படையாக கொண்ட வர்க்க சமூகங்கள் தோன்றுவதையும் இறுதியில் அது சோசலிச சமூகமாக மாற்றமுறும் என்பதையும் மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அறிவியல்பூர்வமாக விளக்குகிறது.

சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் அடிப்படையாக விளங்குவது உற்பத்திசக்திகள், உற்பத்தி உறவுகள் இரண்டையும் உள்ளடக்கிய உற்பத்திமுறை என்றும் இந்த பொருளாதார அமைப்பே அடித்தளம் எனவும் தத்துவம், சட்டம், மதம், பண்பாடு, கலை ஆகியவை அந்தந்த குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பு எனவும் மார்க்சியம் வரையறுக்கிறது.

இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற மார்க்சிய வரையறையை மாற்றுவதில் இருந்துதான் பின்நவீனத்துவவாதிகளின் திருத்தங்கள் துவங்குகின்றன .எது எதனை தீர்மானிக்கிறது என்று கேள்வி எழுப்புவோமானால் பொருளாதார அடித்தளமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் கூறுகிறது.

ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் பிரதிபலிப்பல்ல எனக்கூறி பண்பாட்டு மார்க்சியவாதிகள்’ மார்க்சிய அடிப்படையையே மறுத்துவிடுவதை தோழர் அ.கா.ஈஸ்வரன் சுட்டிக்காட்டுகிறார் .“லுகாக்ஸ், கிராம்சி ஆகியோர் ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாகவும் இதன்மூலம் பொருளாதார காரணங்கள் சமூகஅடிப்படை என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாக தவறாக புரிந்துகொண்டு பண்பாட்டு மார்க்சியம்’ என்ற சிந்தனை போக்கை தொடங்கியதாக தோழர் அ.கா.ஈஸ்வரன் குறிப்பிடுகிறார்.

ஒரு பொருள் தோன்றாத வரை அதைப் பற்றிய கருத்து தோன்றவே இயலாதுஉதாரணத்திற்கு மிக எளிமையாக கூறுவதென்றால் செல்போன் தோன்றாதவரை அதன் தீமைகளை பற்றிய கருத்துகளை பேசுவதற்கு வாய்ப்பே  கிடையாதுஇதையே ஆழமாக கூறுவதென்றால்நவீன கனரக இயந்திர தொழில் வளர்ச்சி ஏற்பட்டு முதலாளித்துவ சமூகத்தின் மிகை உற்பத்தியால் சந்தை விரிவாக்கத்திற்கான தேவை அதிகரித்து அப்பொருளாதார காரணங்களால்தான் உலகபோர்கள் நடைபெற்றனஇவற்றின் உச்சக்கட்டமாக பாசிசவடிவ அரசும் அதற்கான கருத்துகளும் அதை எதிர்ப்பதற்கான கருத்துகளும் தோன்றின.

பண்பாட்டு மார்க்சியர்கள் கூறுவதுபோல் பிரச்சாரத்தின் மூலம் ஒரு சர்வாதிகார அரசை நிலைநாட்டவே முடியாதுசந்தைக்கான நாடுபிடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான போட்டியில் இட்லரின் பாசிச அரசு தனது அரசு படைகளை கொண்டுதான் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது என்பதும் லட்சக்கணக்கான சோவியத் செஞ்சேனை தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து அப்படைகளை வென்று பாசிசத்தை முறியடித்த வரலாறு இருக்கும்போது பண்பாட்டு மார்க்சியவாதிகளின் கூற்று எவ்வளவு அபத்தமானது என சொல்லாமலே விளங்கும்.

ஆனால் மேற்கட்டமைப்பின் தாக்கத்தை மார்க்சியம் மறுக்கவே இல்லைஇது குறித்து தோழர் அ.கா.ஈஸ்வரன் தனது நூலில் உற்பத்தியும் மறுவுற்பத்தியும் அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும்ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும் இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை……. இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை…….. இந்த சார்பான தாக்கம் மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிட முடியாதுபொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும் தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது” என தெளிவுபடுத்துகிறார்.

தமிழகத்தில் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் மார்க்சிய கருத்துகளை மறுத்துவிட்டு லுகாக்ஸ், கிராம்சி போன்றோரின் கருத்துகளைதான் உயர்த்தி பிடிக்கின்றனர்மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுப்பதை மார்க்சியத்தின் பெயரால்என்ற தனது நூலில் அ.மார்க்ஸ் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

 மார்க்சியத்தை பயில்வது என்பது என்றால் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ என்பதாக ஒரு பாரம்பரியத்தை உலகெங்கிலுமுள்ள பொதுவுடமை இயக்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தப் பாரம்பரியத்திலும் கூட தேர்வு செய்யப்பட்ட ஒருசில நூல்கள் மட்டுமே பயிலப்படுவது என்பது  தவிர இந்த பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட கிராம்சி போன்ற புரட்சி வெற்றி பெறாத நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் அல்தூசர் போன்ற கட்சிக்கு அப்பாற்பட்டு நின்று மார்க்சியத்தை வளப்படுத்தியவர்கள் ஆகியோர்கள் பயிலப்படுவதில்லை……என மிகுந்த வருத்தமும் கொள்கிறார் அ.மார்க்ஸ்.

இந்த காரணத்தால்தான் தமிழகத்தில்இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுபொருள்முதல்வாதம், பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கும் சக்தி, வர்க்கப் போராட்டம், பிரதிபலித்தல் கோட்பாடு உள்ளிட்ட செவ்வியல் வடிவத்தில் மார்க்சியத்தை சிறப்பாக போதித்த நா.வானமாமலை, .கைலாசபதி, .சிவத்தம்பி ஆகியோரை இந்தபுதிய இடதுசாரிகள்’ எனப்படுவோர் ஏற்றுக் கொள்வதில்லை.

கோவைஞானி, எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, .மார்க்ஸ் உள்ளிட்டோரை புதிய இடதுசாரிகள்’ என அழைக்கலாம் என தோழர் தோதாத்ரி.தான் குறிப்பிடுகிறார் (இவர்களை இடதுசாரிகள் என அழைப்பதே சரியானது இல்லை என தோன்றுகிறது). அது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இவர்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமளித்த புறகாரணங்களை தெளிவாக முன்வைக்கிறார் தோழர் தோதாத்ரி.

புதிய இடதுசாரிகள் தமிழகத்தில் பல குழுக்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்இவர்களுடைய தோற்றத்தை 1970களில் இருந்தே காணலாம்.இவர்களது செயல்பாட்டிற்குப் பல காரணங்கள் உள்ளனஒன்றாவதாகமார்க்சிய எதிர்ப்புஇரண்டாவதாககட்சியின் செயல்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தி .மூன்றாவதாககட்சியில் ஏற்பட்ட பிளவும், அதன் காரணமாக இடம் பெற்ற தத்துவார்த்த குழப்பமும்நான்காவதாகஇடதுசாரி முகாம் பல பகுதிகளாகப் பிளவுண்டு போனமைஐந்தாவதுவலுவான தலைமை இல்லாது போனதுஆறாவதுதன்னார்வக் குழுவினர் பலர் மார்க்சியம் பற்றிப் பேசத் தொடங்கியதுஇக்குழுவினர் சிலர் திட்டமிட்ட முறையில் ஐரோப்பிய கம்யூனிசத்தை பரப்புவதற்கு இங்கு எடுத்துக் கொண்ட முயற்சிஏழாவதுகட்சி சார்ந்து மார்க்சியத்தை போதித்தவர்கள் வட்டத்திற்கு வெளியே மார்க்சியத்தை ஒரு பண்டித விவகாரமாக அணுகி அதனைப் பல தத்துவங்களுடன் இணைத்துப் பார்க்கும் மனோபாவம் வளர்ந்தமை.

இவையனைத்திற்கும் மேலாக இங்கு உள்ள முதலாளித்துவப் பத்திரிகைகள் பல இந்தவகை விவாதங்களை ஊக்குவித்து ஆதரவு அளித்தமை புதிய இடதுசாரிகளின் கருத்துகள் பரவுவதற்கு பின்புலமாக அமைந்தது எனலாம்என்கிறார் தோழர் தோதாத்ரி.

இந்த சூழல்தான் வர்க்கம், அரசு, வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என மார்க்சியத்தின் அடிப்படைகள் அனைத்தையும் மறுத்துவிட்டு மார்க்சிய முகமூடியை அணிந்துக் கொண்டு தங்களை மார்க்சியவாதிகள் என கூறிக் கொள்ளும் வலுவை இவர்களுக்கு தருகிறது.பின்நவீனத்துவவாதிகளான இவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தவாத தலைவர்களை உயர்த்தி பிடிப்பதும், அவர்களுடன் கைகோர்ப்பதும் எதேச்சையானது அல்ல. இவர்களுக்கு இடையிலே நிலவும் கருத்தியல் ஒற்றுமையே முதலாளித்துவ அரசின் ஆதரவாளர்களாக இவர்கள் ஒருங்கிணைந்து செயல்ப காரணமாகிறது.

பக்கம்பக்கமாக மார்க்சியத்திற்கு எதிராக இவர்கள் எழுதி குவித்திருந்தாலும் அக்கருத்துகள் சாமான்யமக்களை சென்று சேரவில்லை என்பது ஒரு உண்மைஎனினும் மார்க்சியத்தை பயிலத் தொடங்கும் இளம்தலை முறையினர் மத்தியில் இவர்களது எழுத்துகள் மிகப் பெரிய கருத்தியல் குழப்பத்தை தோற்றுவிக்கின்றன. பொதுவெளியில் மார்க்சியர்களாக வலம்வருவதும், இடதுசாரி முகாமில் இவர்கள் மார்க்சிய அறிஞர்களாக அங்கீகரிக்கப்படுவதும் உண்மையான மார்க்சியக் கருத்துகளை கொண்டு செல்வதற்கும் மார்க்சிய வழியில் சமூகத்தை ஆய்வு செய்வதற்கும் பெரும் தடைகளாக இருக்கின்றன.

எனவே இவர்களை அம்பலப்படுத்துவது உண்மையான மார்க்சியர்களின் அத்தியாவசிய பணியாக உள்ளதுஅதற்கு மார்க்சிய தத்துவத்தை அதன் அடிப்படையை பிழையின்றி கற்க தோழர் தோதாத்ரி மற்றும் தோழர் அ.கா.ஈஸ்வரனின் நூல்களை படிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிறது.